இந்தியா

திருமலையில் அரசியல் பேச்சு ரோஜா மன்னிப்பு கேட்க வேண்டும்: சிவசேனா வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆந்திர மாநில மகளிர் அணி தலைவியும், நகரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நடிகை ரோஜா சமீபகாலமாக திருமலைக்கு வந்த போது ஆளும் கட்சியை தீவிரமாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக முதல்வர் சந்திரபாபு நாயுடுவை மிகவும் கடுமையாக விமர்சிக்கிறார்.

திருமலையில் அரசியல் தொடர்பான தர்ணா, ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளன. மேலும், குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் பல்வேறு மாநில முதல்வர் கள், வெளிநாட்டு அரசியல் பிரமுகர்கள் திருமலைக்கு வந்தாலும் அவர்கள் அரசியல் தொடர்புடைய விமர்சனம் செய்ய மாட்டார்கள்.

இது தொடர்பாக, திருப்பதி யில் நேற்று சிவசேனா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஓம்கார் செய்தியாளர்களிடம் கூறியதா வது: அரசியல் தடை செய்யப் பட்டுள்ள இடத்தில் இதுபோன்று ரோஜா நடந்து கொள்வது சரியல்ல. இதனை திருமலை திருப்பதி தேவஸ்தானம் கண்டிப்பதோடு, தக்க நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

அவருக்கு வழங்கும் விஐபி பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்து, அவருக்கு பாடம் புகட்ட வேண்டும். அடிக்கடி கோயில் முன் அரசியல் பேசும் ரோஜா உடனடியாக பக்தர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இதுகுறித்து தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்காலிடம் புகார் மனு அளிக்கப்படும். மேலும் ஆந்திர அரசும் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் சிவசேனா கட்சி சார்பில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு ஓம்கார் தெரிவித்தார்.

பின்னர், இவர்கள் ரோஜாவிற்கு எதிராக முழக்கமிட்டனர்.

SCROLL FOR NEXT