சிலை கடத்தல் வழக்கில் கைதான சென்னை ஆழ்வார்ப்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் தீனதயாள னுடன் தொடர்பு வைத்திருந்த இந்திய அமெரிக்க வம்சாவளி தொழிலதிபரை மும்பை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
மும்பையில் வசித்து வருபவர் விஜய் நந்தா. இந்திய அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த இவர் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் விஜய் நந்தா மும்பையில் உள்ள தனது வீட்டில் ஏராளமான பழங்கால சிலைகளைக் கடத்தி மறைத்து வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது அங்கு மறைத்து வைக்கப்பட் டிருந்த 2,000 ஆண்டுகள் பழமை யான சிலைகள் கண்டுபிடிக்கப் பட்டன. உடனடியாக அந்தச் சிலைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இந்த சிலைகள் அனைத்தும் கிழக்கு மற்றும் தென்மாநிலங் களில் உள்ள இந்து மற்றும் புத்தர் கோயில்களில் இருந்து திருடப்பட்டவை என்றும் 17 மற்றும் 18-ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை என்றும் போலீஸார் தெரிவிக்கின்றனர்.
தமிழக கோயில்களில் திருடப் பட்ட கற்சிலைகள், வெண்கல சிலைகள், யானை தந்தத்தால் ஆன சிலைகள், பழங்கால ஓவியங்கள் உட்பட ஏராளமான சிலைகளை, சென்னை தொழி லதிபர் தீனதயாளன் வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
சிலை கடத்தல் தொடர்பாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் கைது செய்யப்பட்ட தொழி லதிபர் தீனதயாளனுடன், விஜய் நந்தாவுக்கு தொடர்பு இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள் ளது. மேலும் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஹாங்காங் என சர்வதேச அளவிலான கடத்தல் காரர்களுடனும் அவர் தொடர்பு வைத்திருந்ததும் அம்பலமாகி யுள்ளது. அவரது வீட்டில் இருந்து புத்தர், பிள்ளையார், மகாவிஷ்ணு, அம்மன் என பல்வேறு பழங்கால சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.