காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
இந்த தாக்குதல் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் மணிஷ் மேத்தா, ''இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் முதலில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். சிறிய ஆயுதங்களும், தானியங்கி துப்பாக்கிகள், சிறு பீரங்கிகள் கொண்டு தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்தியத் தரப்பும் தக்க வகையில் உறுதியாகவும், திறம்படவும் அவர்களுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது'' என்றார்.
காலை 11 மணிக்குக் கிடைத்த தகவலின்படி, தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.