இந்தியா

உ.பி.யில் முதல்வர் அலுவலக இரும்பு கதவு சரிந்து சிறுமி பலி

பிடிஐ

உத்தரபிரதேசத்தில் முதல்வர் அலுவலகம் அமையவுள்ள கட்டிடத்தின் இரும்பு கதவு 9 வயது சிறுமி மீது சரிந்து விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

முந்தைய சமாஜ்வாதி அரசு ஆட்சியில் லக்னோவில் லோக்பவன் கட்டிட கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது. இந்த கட்டிடத்தில் சக அமைச்சர்களுடன் அமர்ந்து முக்கிய ஆலோசனை நடத்துவதற்காக முதல்வரின் அலுவலகம் அமையவுள்ளது. இதையொட்டி இரவு, பகலாக கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இந்த கட்டிடம் அருகே கிரண் என்ற 9 வயது சிறுமி நேற்று விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த பெரிய இரும்பு கதவு திடீரென சிறுமி மீது சரிந்து விழுந்தது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக சிறுமியை தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அரசு அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

SCROLL FOR NEXT