இந்தியா

காங்கிரஸின் கடமை: ஹசாரே கடிதத்திற்கு ராகுல் பதில்

செய்திப்பிரிவு

லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவது காங்கிரஸின் கடமை என தனக்கு சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே எழுதிய கடிதத்திற்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பதில் கடிதம் எழுதியுள்ளார்.

ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முயற்சி எடுத்து வரும் ராகுல் காந்திக்கு பாராட்டு தெரிவித்து அன்னா ஹசாரே நேர்று கடிதம் அனுப்பியிருந்தார்.

ஹசாரே கடிதத்திற்கு இன்று ராகுல் காந்தி பதில் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில், ஹசாரேவின் பாராட்டுகள் தன்னை ஊக்குவிப்பதாகவும், காங்கிரஸ் கட்சி வலுவான லோக்பால் சட்டத்தை இயற்ற வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த முயற்சியில் ஹசாரேவின் பங்களிப்புக்கு மரியாதை அளிப்பதுடன், ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இன்று மதியம் மாநிலங்களவையில் லோக்பால் மசோதா மீதான விவாதம் தொடங்குவதற்கு முன்னர் அண்ணா ஹசாரே எழுதிய கடிதத்தையும், ராகுலின் பதிலையும் காங்கிரஸ் மேலிடம் வெளியிட்டது.

SCROLL FOR NEXT