இந்தியா

கர்நாடகாவில் ‘பாஸ்ட் புட்’ உணவகங்களுக்கு கட்டுப்பாடு: சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்

இரா.வினோத்

கர்நாடக சட்டபேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடை பெற்று வருகிறது. நேற்று சட்ட மேலவை விவாதத்தின்போது பாஜக எம்எல்ஏ ராமசந்திர கவுடா, “துரித உணவகங்களில் உயிருக்கு ஆபத்தான சில இரசாயன பொருட் கள் கலக்கப்படுகின்றன. எனவே இந்த உணவை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். மேலும் உணவில் செயற்கை சுவை யூட்டி பயன்படுத்துவதற்கு எத் தகைய விதிமுறைகள் கடை பிடிக்கப்படுகின்றன?” என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளிக்கும் வகையில் சுகாதார அமைச்சர் ரமேஷ் குமார் பேசும்போது, “துரித உணவகங்கள், சீன பாணி உண வகங்கள், சாலையோர கடை களில் தயாரிக்கப்படும் உணவில் மோனோ சோடியம், லோடோமேட் போன்ற செயற்கை சுவையூட்டி களைச் சேர்ப்பதாக புகார் எழுந் துள்ளது. இந்த உணவை உண் ணும் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படும் என அறிவியல் ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இத்தகைய சுவையூட்டி களுக்கு தடை விதிப்பது தொடர்பாக பரிசீலிக்கப்படும். இதேபோல உடலுக்கு ஆபத் தான பொருட்க‌ளைப் பயன் படுத்தும் உணவகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். தேவைப்பட்டால் இவற்றுக்கு முற்றிலும் தடை விதிப்பது பற்றி யும் பரிசீலிக்கப்படும்” என்றார்.

இதனால் சீன பாணி உணவகங்கள், துரித உணவகங்கள், சாலையோர கடைக்காரர்களும் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

SCROLL FOR NEXT