நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஆம் ஆத்மி எம்.பி. பகவந்த் மான் வீடியோ எடுத்த விவகாரம் தொடர்பாக 9 பேர் அடங்கிய விசாரணைக் குழுவுக்கு மேலும் 2 வார கால அவகாசம் அளித்து மக்களவை அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் அனுமதித்துள்ளார்.
கடந்த ஜூலை 21-ம் தேதி ஆம் ஆத்மி எம்.பி. பகவந்த் மான் நாடாளுமன்ற பாதுகாப்பு நடைமுறைகளை வீடியோ எடுத்து, ஃபேஸ்புக்கில் பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக 9 பேர் அடங்கிய குழு விசாரணைக்கு கடந்த ஜூலை 25-ம் தேதி உத்தரவிடப்பட்டது.
இக்குழு மேலும் அவகாசம் கோரியது. இதைத்தொடர்ந்து வரும் 4-ம் தேதி முதல் 2 வாரங்களுக்கு அவகாசத்தை நீட்டித்து சுமித்ரா மகாஜன் அனுமதி அளித்தார்.