இந்தியா

மைசூரு மகாராஜாவுக்கு 27-ல் திருமணம்: அரண்மனையில் ஏற்பாடுகள் தீவிரம்

இரா.வினோத்

மைசூரு மகாராஜா யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ் உடை யாருக்கு வரும் 27-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மைசூரு அரண்மனை வளாகத்தில் நடந்து வருவ‌தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மைசூரு உடையார் சாம்ராஜ்ஜி யத்தின் புதிய மகாராஜாவாக யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ் உடையார் கடந்த ஆண்டு முடிசூட்டப்பட்டார். இவ‌ருக்கும் ராஜஸ்தான் மன்னர் குடும்பத்தை சேர்ந்த திரிஷிகாகுமாரிக்கும் திரு மணம் செய்ய கடந்த 2014-ம் ஆண்டு பெரியோர்களால் நிச்சயிக் கப்பட்டது. இதனிடையே யதுவீர் மைசூரு மகாராஜாவாக பொறுப் பேற்றதால், திருமணம் தள்ளிப் போனது. இந்நிலையில் மைசூரு அரண்மனை நிர்வாகம் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:

யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ் உடையாருக்கும் திரிஷிகாகு மாரிக்கும் வரும் 27-ம் தேதி மைசூரு அரண்மனையில் திருமணம் நடைபெற உள்ளது.

திருமணத் துக்கு 10 நாட்களுக்கு முன்பாகவே பல்வேறு பூஜைகளும், குடும்ப நிகழ்ச்சிகளும் தொடங்குகிறது. இதையடுத்து 27-ம் தேதி மைசூரு அரண்மனையில் உள்ள‌ தர்பார் ஹாலில் திருமண வரவேற்பும், அதைத் தொடர்ந்து திருமணமும் நடைபெறுகிறது.

ஆடை கட்டுப்பாடு

கர்நாடக முதல்வர், அமைச்சர் கள் உட்பட பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்கும் இந்த திருமணத்துக்கான அழைப்பிதழ் கள் அச்சிடும் பணி முடிந்துள்ளது. இந்த அழைப்பிதழ்களை முக்கிய விருந்தினர்களுக்கு மகாராணி பிரமோதா தேவி அனுப்பி வருகிறார். இந்த திருமணத்தில் பங்கேற்கும் ஆண்கள் வெள்ளை அல்லது கறுப்பு நிற கோட், வெள்ளை பேன்ட், சிவப்பு தலைப் பாகை அணிந்திருக்க வேண்டும். இல்லாவிடில் நீல நிற கோட் சூட் அணிந்திருக்க வேண்டும். பெண்கள் புடவையும், பாரம்பரிய உடைகளையும் அணிந்துவர வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமண நிகழ்ச்சியையொட்டி மைசூரு அரண்மனையில் அலங்கார வளைவுகள் அமைப்பது, மின் விளக்குகள் பொருத்துவது, வண்ணம் தீட்டுவது உள்ளிட்ட பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

          
SCROLL FOR NEXT