ஆந்திராவில் கிழக்கு கோதாவரி மாவட்டம், ஒய்.ராமாவரம் மண்டலத்தில் உள்ள வனப்பகுதி யில் அமைந்துள்ளது சாப்பராயி எனும் கிராமம். மருத்துவம், சாலை உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத இந்த கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் கடந்த மாதம் 29-ம் தேதி முதல் திடீரென விஷக் காய்ச்சல் பரவி வருகிறது. இதுவரை 3 குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்த தும் முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவின்படி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயா மிஸ்ரா, மருத்துவ குழுவினரை கிராமத்துக்கு அனுப்பி வைத்தார்.