காஷ்மீர் அரசியல்வாதிகளுக்கு ராணுவத்தின் தரப்பிலிருந்து பணம் கொடுத்ததாக கூறிய விவகாரத்தில், முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங்கிற்கு சம்மன் அனுப்பி, விசாரணை நடத்த வேண்டும் என, ஆளும் தேசிய மாநாட்டு கட்சி உறுப்பினர்களும், மக்கள் ஜனநாயக கட்சியினரும் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், வி.கே. சிங்கிற்கு ஒரு வாய்ப்பு தரும் வகையில், அவர் கூறிய கருத்துக்கு விளக்கம் அளிக்கலாம் என சபாநாயகர் அறிவித்துள்ளார். சபாநாயகரின் இந்த முடிவுக்கு, பா.ஜ., உறுப்பினர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநில அமைச்சர்களுக்கு ராணுவத்தின் தரப்பிலிருந்து பணம் தரப்படுவதாக முன்னாள் தலைமை தளபதி வி.கே.சிங் தெரிவித்திருந்தார். இந்த புகார் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்தவேண்டும் என அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.