இந்தியா

பணிப்பெண் மர்ம மரணம்: எம்.பி. மனைவியிடம் போலீஸ் விசாரணை

செய்திப்பிரிவு

வீட்டில் வேலைபார்த்த பெண் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக எம்.பி. மனைவியிடம் போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் ஜான்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தனஞ்ஜெய் சிங். பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த தனஞ்ஜெய் சிங் வீட்டில் வேலை பார்த்து வந்த பெண் இன்று காலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

கட்ந்த 10 மாதங்களாக எம்.பி. வீட்டில் பணி புரிந்து வந்த அந்தப் பெண்ணை, எம்.பி.-யின் மனைவி துன்புறுத்தி வந்ததாக தகவல் கிடைத்ததை அடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக தனஞ்ஜெய் சிங் மனைவி ஜக்ரிதி சிங்கிடம் போலீசார் விசாரணை‌ மேற்கொண்டுள்ளனர்.

வீட்டில் பணியில் இருந்த மற்ற வேலைக்காரர்களிடமும் விசாரணை நடைபெற்று வரிகிறது.

உயிரிழந்த வேலைக்காரப் பெண்ணின் தலை, வயிறு, மார்பு மற்றும் கைகளில் பலமான காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

SCROLL FOR NEXT