ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில், விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறுக்கு குழாய் அமைக்கும்பணியின் போது, உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அனந்தபூர் மாவட்டம், விடபனகல் மண்டலம், தீகலகுர்த்தி கிராமத்தை சேர்ந்த விவசாயி ரேவண்ணா. இவர் தனது விவசாய நிலத்தில் நேற்று ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்த ஆழ்துளை கிணற்றில் இரும்புக் குழாய்களை பொருத்திக் கொண்டிருந்த போது, மேலே இருந்த 11 கி.வாட் உயர் அழுத்த மின்சார கம்பி இரும்புக் குழாயில் பட்டது. இதில் குழாயைப் பிடித்து கொண்டிருந்த ரேவண்ணா, அவரது மகன்கள், பிரம்மய்யா, எர்ரிசாமி மற்றும் பேரன் ராஜசேகர், உறவினர் வீரேந்திரா ஆகிய 5பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து விடபனகல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் சந்திரபாபு நாயுடு, இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத் தாருக்கு இரங்கல் தெரிவித் துள்ளார்.