ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக, அந்த மாநிலங்களில் முதல்வராக பதவியேற்கவுள்ள பாஜக தலைவர்கள் மூவருக்கும் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில், அங்கு அமோக வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்கவுள்ள வசுந்தரா ராஜேவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதமர் வாழ்த்து தெரிவித்ததாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுபோல், மத்தியப் பிரதேச முதல்வராக மீண்டும் பொறுப்பேற்க உள்ள சிவராஜ் சிங் சவுகான் மற்றும் சத்தீஸ்கர் முதல்வராக மீண்டும் பொறுப்பேற்க உள்ள ரமண் சிங் ஆகியோரையும் பிரதமர் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.