இந்தியா

ஆந்திராவில் கனமழை: இயல்பு வாழ்க்கை முடக்கம்

செய்திப்பிரிவு

ஆந்திராவில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதாலும், வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாலும் கன மழை பெய்து வருகிறது.

கடந்த 4 நாட்களாக கடலோர ஆந்திரம், ராயலசீமா பகுதிகளில் பெய்து வரும் கன மழைக்கு இதுவரை 12 பேர் பலியாகியிருக்கின்றனர். 2.5 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெல், கோதுமை, பருத்தி, சோளம் போன்ற பயிர்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கனமழை காரணமாக கிருஷ்ணா ந்தியும் பாகதுவா, வம்சதாரா ஆறுகளிலும் வெள்ளம் கரை புரண்டோடுகிறது.

ஸ்ரீகாகுளம், குண்டூர் மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன, இது குறித்து குண்டூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ் குமார் கூறுகையில்: மாவட்டதில் 36 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் 11,000 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஸ்ரீகாகுளம் மாவட்டதில் பல்வேறு கிராமங்களில் இருந்து 45,000 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT