குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்க இந்தியா வருமாறு, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை அழைப்பு விடுத்தார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பகிர்வில், இந்தக் குடியரசு தினத்தில், தலைமை விருந்தினராக பங்கேற்க அமெரிக்க அதிபராக ஒபாமாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், இந்தியக் குடியரசு தின விழாவில் பங்கேற்கும் முதல் அமெரிக்க அதிபர் என்ற சிறப்பை பராக் ஒபாமா பெறுவார்.