இந்தியா

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்

செய்திப்பிரிவு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. முதல் நாளில் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றுவார்.

அதேநாளில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. முதல்முறையாக ரயில்வே பட்ஜெட் ரத்து செய்யப்பட்டு மத்திய பட்ஜெட்டுடன் இணைத்து தாக்கல் செய்யப்பட உள்ளது.

வரும் 9-ம் தேதி பட்ஜெட் தொடரின் முதல் பகுதி நிறைவடையும். அதைத் தொடர்ந்து மீண்டும் மார்ச் 9-ம் தேதி இரண்டாம் பகுதி கூட்டத் தொடர் தொடங்கி ஏப்ரல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதனிடையே இந்த கூட்டத்தொடரில் பண மதிப்பு நீக்கம் விவகாரத்தை மீண்டும் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்த விவகாரத்தில் பட்ஜெட் தொடரின் முதல் 2 நாட்களை புறக்கணிக்க திரிணமூல் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

SCROLL FOR NEXT