கேரள மாநிலம், கோழிக்கோட் டில் ஐஸ் கிரீம் பார்லரில் இளம் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தப்படுவதாக 1997-ம் ஆண்டில் பதிவான வழக்கில் முன்னாள் அமைச்சர் குஞ்சாலிக்குட்டிக்கு முக்கிய தொடர்பு இருப்பதாக, முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் குற்றம்சாட்டி வருகிறார்.
மேலும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, கேரள உயர்நீதிமன்றத்தில் அச்சுதானந்தன் மனுத்தாக்கல் செய்தார். மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அச்சுதானந்தனின் மனுவை உச்சநீதிமன்றமும் நேற்று தள்ளுபடி செய்தது. கோரிக்கையை நிரா கரித்தது மட்டுமின்றி, அரசியல் எதிரி களை பழிவாங்கும் நடவடிக்கை களுக்காக நீதிமன்றத்தை பயன்படுத்த முடியாது என்றும், இதை விட முக்கியமான பணிகள் நீதிமன்றத்துக்கு இருக்கின்றன என்றும், அச்சுதானந்தனுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
தேவைப்பட்டால் விசாரணை நீதிமன்றத்தில் அச்சுதானந்தன் முறையிடட்டும் என்றும் நீதிபதிகள் கூறினர். இதுகுறித்து கருத்து தெரிவித்த அச்சுதானந்தன், ‘சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்’ என்றார்.