இந்தியா

சாரதா நிறுவன ஊழல்: ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டம்

செய்திப்பிரிவு

சாரதா சீட்டு நிறுவன ஊழல் தொடர்பாக ரிசர்வ் வங்கியின் சில அதிகாரிகளிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளது.

சாரதா நிறுவனம் வங்கிசாரா நிதி நிறுவனமாக செயல்படவில்லை. எனவே, அதன் செயல்பாடுகளை முறைப்படுத்தும் அதிகாரம் ரிசர்வ் வங்கிக்கு இல்லை. எனினும், இது தொடர்பாக சில தகவல்கள் கிடைத்துள்ளதால் அதுகுறித்து ரிசர்வ் வங்கியிடம் விளக்கம் கேட்க திட்டமிட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதேநேரம், ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்த உள்ளதால், அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டதாகக் கருத்தில் கொள்ளக்கூடாது என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.

பொதுமக்களிடமிருந்து முதலீடு திரட்டி செயல்படும் நிறுவனங்களை கட்டுப்படுத்துவது பங்கு பரிவர்த் தனை வாரியத்தின் (செபி) செயல். எனவே, சாரதா நிறுவன ஊழல் குறித்து செபி உயர் அதிகாரிகளிடம் ஏற்கெனவே விசாரணை நடத்தி உள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. இதன்படி செபி விதிமுறைகளை சாரதா நிறுவனம் மீறி உள்ளது தெரியவந்துள்ளது.

SCROLL FOR NEXT