இந்தியா

காஷ்மீர் விவகாரம்; அனைத்து தரப்பினருடன் பேச்சு வார்த்தையை உறுதி செய்க: அனைத்துக் கட்சி குழு

பிடிஐ

“ஜம்மு காஷ்மீர் பிரச்சினைக்குச் சம்பந்தப்பட்ட அனைத்து தரப் பினருடன் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்” என்று அங்கு சென்றுவந்த அனைத்துக் கட்சிக் குழு கூறியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான இக்குழுவினர் டெல்லியில் நேற்று சந்தித்தனர். ஜம்மு காஷ்மீரில் கடந்த 4, 5 ஆகிய தேதிகளில் பொது மக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் தாங்கள் ஆலோசித்தது தொடர்பாக விவாதித்தனர்.

இந்த சந்திப்புக்குப் பிறகு ஒரு மனதாக வெளியிடப்பட்ட அறிக்கை யில், “ஜம்மு காஷ்மீர் மக்கள் வன் முறைப் பாதையை கைவிட்டு, பேச்சுவார்த்தை மூலம் தங்கள் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முன்வரவேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் ஹுரியத் மாநாடு உள்ளிட்ட பிரிவினைவாத அமைப்பு கள் பற்றி எதுவும் குறிப்பிடாமல், “சம்பந்தப்பட்ட அனைத்து தரப் பினருடன் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளை மத்திய, மாநில அரசு கள் எடுக்க வேண்டும். அதேநேரத் தில் நாட்டின் இறையாண்மை விவகாரங்களில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளக் கூடாது” என்றும் கூறியுள்ளனர்.

“ஜம்மு காஷ்மீரின் தற் போதைய நிலைமை கவலை அளிக்கிறது. ஜம்மு காஷ்மீரில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் விரைவில் வழக்கம் போல் செயல்படுவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், போராட்டத்தில் காயம் அடைந்த பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்களுக்குச் சிகிச்சை அளிக்கவும் அரசு பய னுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றும் அந்த அறிக் கையில் கூறியுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில், “இந்தியா பாகிஸ்தான் இடையே பேச்சு வார்த்தை தொடங்க வேண்டும். மக்களுக்கு நம்பிக்கையூட்டும் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என இடதுசாரி கட்சிகள் கேட்டுக்கொண்டன.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறும்போது, “ஜம்மு காஷ்மீரில் பெல்லட் குண்டு களுக்குத் தடை விதிப்பது, காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி போன்ற நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தினேன்” என்றார்.

இதனிடையே மிர்வைஸ் உமர் பரூக் தலைமையிலான மிதவாத ஹுரியத் மாநாடு நேற்று விடுத் துள்ள அறிக்கையில், “காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி யுள்ளது. இது இந்திய மக்களை முட்டாளாக்கும் மற்றும் தவறாக வழிநடத்தும் முயற்சியாகும்” என்று கூறப்பட்டுள்ளது.

மீண்டும் மோதல்

காஷ்மீர் பள்ளத்தாக்கு முழு வதும் நேற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், அனந்தநாக் மாவட்டத்தில் பாது காப்பு படையினர் போராட்டக் காரர்கள் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் 4 பேர் காயம் அடைந்தனர்.

SCROLL FOR NEXT