இந்தியா

ஊழல் வழக்கில் நீதிமன்றத்தில் லாலு ஆஜர்

பிடிஐ

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும் பிஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், பாட்னாவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார்.

அவருடன் மற்றொரு முன்னாள் முதல்வர் ஜகன்னாத் மிஸ்ரா மற்றும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மேலும் சிலர், நீதிபதி தேவ்ராஜ் திரிபாதி முன்னிலையில் ஆஜராகினர்.

கடந்த 1996-ல் பாகல்பூர் கருவூலத்தில் இருந்து ரூ.40 லட்சம் முறைகேடாக பெறப்பட்டது தொடர்பான இந்த வழக்கில் 27 பேர் விசாரணையை எதிர்கொண்டுள்ளனர்.

கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான அனைத்து வழக்கு களையும் லாலு எதிர்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராக விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.

SCROLL FOR NEXT