இந்தியா

குஜராத் கலவர வழக்கில் 9 பேர் கொலைக் குற்றவாளிகள் : உயர் நீதிமன்றம் தீர்ப்பு

செய்திப்பிரிவு

குஜராத் வன்முறை தொடர்பான வழக்கில் 9 பேர் கொலைக் குற்ற வாளிகள் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத் தைத் தொடர்ந்து 2002-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி, விராம்கம் நகரில் முஸ்லிம் சமூகத்தினர் வசித்த பகுதிக்குள் புகுந்த 40 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் தர்கா மீது தாக்குதல் நடத்தியது. இதில், 3 பேர் உயிரிழந்தனர்.

இவ்வழக்கில் 10 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. கடந்த 2011-ம் ஆண்டு, இரண்டு பேர் மீது கொலைக்குற்றத்தை உறுதி செய்த விசாரணை நீதிமன்றம், நான்கு பேர் சிறிய அளவிலான குற்றங்கள் செய்தவர்கள் என்றும் மற்ற நால்வரை விடுவித்தும் தீர்ப்பளித்தது.

இதுதொடர்பாக மேல்முறை யீட்டு வழக்கு உயர் நீதிமன்றத் தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹர்ஷ் தேவானி, பைரன் வைஷ்ணவ் ஆகியோரடங்கிய அமர்வு கடந்த திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

அப்போது, விசாரணை நீதி மன்றம் அளித்த 2 பேர் கொலைக் குற்றவாளிகள் என்ற தீர்ப்பை நீதிபதிகள் உறுதி செய்தனர். அதே சமயம் குற்றம்சாட்டப்பட்ட 10 பேரில் மொத்தம் 9 பேர் கொலைக் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த னர். அதாவது மேல் முறையீட்டில் கூடுதலாக 7 பேர் கொலைக்குற்ற வாளிகள் என உறுதி செய்யப் பட்டுள்ளனர். எஞ்சிய ஒருவரான தேவாபாய் சமத்பாய் பர்வத் விடுவிக்கப்பட்டுள்ளார். தண்டனை விவரம் வரும் ஜூலை 25-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

-பிடிஐ

SCROLL FOR NEXT