இந்தியா

தருண் தேஜ்பாலிடம் கோவா போலீஸ் விசாரணை

செய்திப்பிரிவு

'தெஹல்கா' இதழ் முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க கோவே போலீசார் டெல்லி வந்துள்ளனர். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என டெல்லி போலீசாரும் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சாமு டவேரஸ் தலைமியிலான 4 பேர் கொண்ட போலீஸ் குழு டெல்லி வந்துள்ளது. அக்குழுவினர், தருண் தேஜ்பாலிடம் விசாரணை நடத்தும் முன்னர், 'தெஹல்கா' இதழின் நிர்வாக இயக்குநர் ஷோமா சவுத்ரியை சந்திக்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணையும் சந்திக்கவுள்ளனர்.

தன் மீதான புகாரில் போலீஸ் மற்றும் விசாரணை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக தெஹல்காவின் முன்னாள் நிர்வாக ஆசிரியர் தருண் தேஜ்பால் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெஹல்கா நிறுவனத்தின் விழா ஒன்று சமீபத்தில் கோவாவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்தது. அப்போது தெஹல்கா ஆசிரியர் தருன் தேஜ்பால் லிப்டில் வரும்போது தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பத்திரிகையாளர் ஒருவர் புகார் கூறினார்.

SCROLL FOR NEXT