ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டம் தொடர்பாக கொண்டு வரப்பட்ட தற்போதைய கொள்கைக்கு பதி லாக கோஷ்யாரி கமிட்டியின் பரிந்து ரையை அமல்படுத்தக் கோரி ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் அமைப்பு சார்பில் தொடரப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓய்வூதியத்தை சீராய்வு செய்ய மத்திய அரசு கொள்கை வகுத்தது. இதை எதிர்த்து அனிச்சையாக ஆண்டுதோறும் சீராய்வு செய்யலாம் என்ற கோஷ் யாரி கமிட்டியின் பரிந்துரையை அமல்படுத்தக் கோரி ஓய்வு பெற்ற இந்திய ராணுவ வீரர்களின் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் சி.நாகப்பன் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை ஆராய்ந்த நீதிபதிகள் இது குறித்து 8 வாரங்களுக்குள் பதில் அளிக்க கேட்டு மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.