தீவிரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் பேச முடியும் என்று இந்தியா மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலாளர் அய்ஜாஸ் அகமது சவுத்ரி கடந்த 19-ம் தேதி மத்திய அரசுக்கு 2-வது முறையாக ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், காஷ்மீர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்த மாத இறுதியில் இஸ்லாமா பாத்துக்கு வருமாறு மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஜெய்சங்கர், சவுத்ரிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். இந்தக் கடிதத்தைப் பாகிஸ்தானுக் கான இந்திய தூதர் கவுதம் பம்பாவாலே சவுத்ரியிடம் நேற்று முன்தினம் வழங்கியதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அந்தக் கடிதத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி யில் சட்டவிரோதமாக முகாமிட் டுள்ள பாகிஸ்தான் ராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும் என மீண்டும் வலியுறுத்தப்பட் டுள்ளது. மேலும், பாகிஸ்தான் மண்ணிலிருந்து ஏவப்படும் தீவிர வாதம் இந்தியாவுக்கு கவலை அளிப்பதாக உள்ளதாகவும் இது குறித்து மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயாராக உள்ளது என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி புர்ஹான் வானி கடந்த மாதம் என்கவுன்ட்ட ரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து, கடந்த ஒரு மாதத் துக்கும் மேலாக அங்கு கலவரம் நீடிக்கிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் அரசு வானியை தியாகியாக சித் தரித்து அறிக்கை வெளியிட்டது. இதனிடையே, காஷ்மீர் வன்முறைக்கு பாகிஸ்தான் தூண்டு தலே காரணம் என இந்தியா குற்றம்சாட்டி உள்ளது. இதனால் இரு நாடுகளுக்கிடையிலான உறவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளது.