இந்தியா

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு: பிரதமர் உறுதி

செய்திப்பிரிவு

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு மத்திய அரசு தீர்வு காணும் என தன்னை சந்தித்த மீனவப் பிரதிநிதிகளிடம் பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்துள்ளார்.

கடந்த டிச. 11-ல் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 110 மீனவர்கள், ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 30 பேர் என 140 பேரை இலங்கை கடற்படையினர் ஒரே நேரத்தில் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி நாகை மீனவர்கள் டிச.21 முதல் 24 வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.

இந்நிலையில், நாகை, புதுக்கோட்டை, காரைக்கால் மீனவர்களை விடுவிக்கக் கோரி அப்பகுதி மீனவப் பிரதிநிதிகள் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று( சனிக்கிழமை) சந்தித்தனர். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்ககோரி மனு கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து, மீனவப் பிரதிநிதிகளிடம் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், தமிழக மீனவப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு ஏற்படும் என கூறியதாக தெரிகிறது.

SCROLL FOR NEXT