இந்திய குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி 5 நாள் பயணமாக கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான ருவான்டா, உகாண்டாவுக்கு சென்றுள்ளார். அவருடன் மத்திய அமைச்சர் விஜய் சம்பலா, எம்.பி.க்கள் கனிமொழி, ரன்விஜய் சிங் ஜுதேவ், ரணி நாரா, பி.கே.பிஜு ஆகியோர் அடங்கிய உயர் நிலைக் குழுவும் சென்றுள்ளது.
முதல்கட்டமாக ருவான்டா தலைநகர் கிகாலி சென்ற ஹமீது அன்சாரி அந்த நாட்டு அதிபர் பால் காகேமை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து ருவான்டா பிரதமர் அனாஸ்தஸே முரிகேஜியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத் தினார்.
அப்போது இருநாடுகளுக்கும் இடையே அறிவியல், தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில் 2 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும் ருவான்டாவில் தொழில் மேம்பாட்டு மையம் அமைக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.