இந்தியா

கர்நாடக முதல்வரின் மகன் உடல் அடக்கம்: முக்கிய தலைவர்கள் கண்ணீர் அஞ்சலி

செய்திப்பிரிவு

உடல் நலக்குறைவால் மரண மடைந்த கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மகன் ராகேஷின் உடல் அவரது சொந்த ஊரில் நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்ட‌து.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெல்ஜியத்துக்கு சுற்றுலா சென்றிருந்த ராகேஷுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பிரஸ்ஸல்ஸ் நகரின் அன்ட்வெர்ப் பல்கலைக்கழக மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.

இதையடுத்து, ராகேஷின் உடல் நேற்று முன்தினம் இரவு பெல்ஜியத்தில் இருந்து தனி விமானத்தில் பெங்களூருவுக்கு கொண்டுவரப்பட்டது. அங் கிருந்து நேற்று மைசூருக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக் காக வைக்கப்பட்ட‌து.

அப்போது 10 ஆயிரத்துக் கும் மேற்பட்ட சித்தராமையாவின் ஆதரவாளர்களும், காங்கிரஸா ரும் பொது மக்களும் ராகேஷின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் ராகேஷின் உடலுக்கு மலர் வளை யம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு டி.காட்டூர் கிராமத்தில் ராகேஷ் உடல் நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT