இந்தியா

பசுப்பாதுகாப்பு அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: அமித் ஷா

ஐஏஎன்எஸ்

யாரும் சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொள்ள முடியாது என்பதில் பாஜக உறுதியாக உள்ளது என்ற அமித் ஷா, பசுப்பாதுகாப்பு அமைப்பினர் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.

“இது குறித்த நாங்கள் உரக்கவே பேசியுள்ளோம். அனைவரும் சட்டம் ஒழுங்குக்குக் கட்டுப்பட வேண்டும். யாரும் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்கக் கூடாது. இதனை நாங்கள் அவர்களுக்கு வலுவாகத் தெரிவித்துள்ளோம்.

மேலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்றார்.

இந்த பசுப்பாதுகாப்பு இயக்கத்தினரால் பாஜகவுக்கு கெட்ட பெயர் ஏற்படவில்லையா என்ற கேள்விக்குப் பதில் அளித்த அமித் ஷா, “பசுவதைத் தடுப்பு நம் அரசியல் சாசன முன்னுரையில் உள்ளது” என்றார்.

பசுக்களுக்கும் தனிச்சிறப்பான அடையாள எண் உருவாக்கும் ஆதார் போன்ற திட்டம் குறித்து அவர் கூறும்போது, “நான் இத்தகைய செய்திகளை வாசித்தேன், ஆனால் இது குறித்த தரவுகள் எனக்குத் தெரியவில்லை” என்றார்.

SCROLL FOR NEXT