நாடாளுமன்றம் இந்திய ஜனநாய கத்தின் கோயில். அதன் இரு அவைகளும் விவாத மேடையாக, ஆலோசனைக் கூடமாக செயல்பட வேண்டும். அடிக்கடி அமளியால் முடங்கக்கூடாது என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவுறுத்தியுள்ளார்.
இந்த ஆண்டில் நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் தொடர் நேற்று தொடங்கியது. இதை யொட்டி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இருஅவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற் றினார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
ஜன் தன் வங்கிக் கணக்கு திட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இத்திட்டத்தில் இதுவரை 21 கோடி பேருக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப் பட்டுள்ளன. அவற்றில் ரூ.32 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டி ருக்கிறது.
அனைவருக்கும் வீடு, உணவு உத்தரவாதம் ஆகியவற்றை பிரதான குறிக்கோளாகக் கொண்டு அரசு செயல்படுகிறது. 2022-ம் ஆண்டுக்குள் வீடற்ற அனைவருக் கும் வீடு கட்டி கொடுக்கப்படும். இத்திட்டத்தில் ரூ.24,600 கோடியில் 4.25 லட்சம் வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவு உத்தரவாத திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் வறுமை முழுமையாக ஒழிக்கப்படும்.
42 திட்டங்களில் நேரடி மானியத் திட்டம் மிகச் சிறப்பாக செயல்படுகிறது. அதன்படி விளிம்பு நிலையில் வாழும் மக்களுக்கு அரசு மானியங்கள் நேரடியாகச் சென்றடைகின்றன.
இந்தியாவில் தயாரிப்போம், முத்ரா, திறன்சார் இந்தியா, தொடங்கிடு இந்தியா உள்ளிட்ட திட்டங்களால் வேலைவாய்ப்புகள் பெருகி வருகின்றன. தொழில் தொடங்க ஏதுவான நாடுகள் குறித்த உலக வங்கியின் பட்டியலில் இந்தியா 12 இடங்கள் முன்னேறியுள் ளது.
விவசாயிகள் நலமாக இருந்தால் தான் நாடு வளமாக இருக்கும். வேளாண் விளைபொருட்களை நல்ல விலைக்கு விற்க நாடு முழுவதும் 585 மொத்த விலை சந்தைகளை டிஜிட்டல் முறையில் ஒன்றிணைக்க திட்டமிடப்பட்டுள் ளது. பயிர் காப்பீடு திட்டம், மண் வள அட்டை ஆகிய திட்டங்கள் முனைப்புடன் செயல்படுத்தப்படு கின்றன.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மேம் படுத்தப்பட்டுள்ளது. ஏழைகளுக் காக 3 காப்பீடு, ஓய்வூதிய திட்டங்கள் வெற்றிகரமாக அமல் செய்யப்பட்டுள்ளன.
கிராமப்புற முன்னேற்றத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதன்படி வரும் 2019-ம் ஆண்டுக் குள் அனைத்து கிராமங்களும் இருப்பு பாதைகளால் இணைக் கப்படும்.
ஆயுர்வேதா, யோகா, இயற்கை வைத்தியம், யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகிய மருத்துவ முறைகளுக்கு முக்கியத் துவம் அளிக்கப்படுகிறது. அரசின் முயற்சியால் ஜூன் 21-ம் தேதி உலக யோகா தினமாக கொண்டாடப் படுகிறது.
அரசு நிர்வாகத்தில் ஊழலை அறவே ஒழிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஊழல் வாதிகள் கடுமையாக தண்டிக்கப் படுகின்றனர். கடந்த ஆண்டில் மிகை மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2018-க்குள் அனைத்து வீடுகளிலும் மின் வசதி ஏற்படுத்தப்படும். தடை பட்டிருந்த 73 சாலை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 7,200 கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள் ளது.
பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில் வரும் 2019 மார்ச் மாதத்துக்குள் ஒரு லட்சத்து 78 ஆயிரம் கிராமங்களில் உள்கட்டமைப்பு சாலை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
சிறிய நகரங்களிலும் விமானச் சேவை தொடங்கப்படும். நாடு முழுவதும் உலகத் தரம் வாய்ந்த எலெக்ட்ரானிக் உற்பத்தி கூடங்கள் உருவாக்கப்படும். நாட்டின் மென்பொருள் ஏற்றுமதி கணிசமாக அதிகரித்து வருகிறது.
கருப்புப் பணத்தை கட்டுப் படுத்த அரசு மேற்கொண்ட நடவடிக் கைகள் பலன் அளிக்கத் தொடங்கி யுள்ளன. விண்வெளித் துறையிலும் இந்தியா சாதனை படைக்கிறது.
பாகிஸ்தானுடன் நல்லுறவு
பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப் படை தளம் மீதான தாக்குதலை பாதுகாப்புப் படை யினர் வெற்றிகரமாக முறியடித் தனர். அவர்களின் பணி பாராட்டுக் குரியது. இத்தகைய எல்லை தாண்டிய தீவிரவாதத்தை தடுக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக் கப்படும்.
அண்டை நாடுகளுடன் குறிப்பாக பாகிஸ்தானுடன் நல்லுறவை பேண இந்தியா விரும்புகிறது. எல்லை தாண்டிய தீவிரவாதத்தை தடுக்க அந்த நாட்டின் ஒத்துழைப்பை பெற முயற்சி செய்து வருகிறோம்.
ஜனநாயக கோயில்
நாடாளுமன்றம் இந்திய ஜன நாயகத்தின் கோயில். இரு அவை களையும் சுமுகமாக நடத்த வேண்டியது உறுப்பினர்களின் கடமை. அவரவர் பொறுப்பை உணர்ந்து பணியாற்ற வேண்டும். இரு அவைகளும் விவாத மேடை யாக, ஆலோசனைக் கூடமாக செயல்பட வேண்டும். அடிக்கடி அமளியால் முடங்கக்கூடாது.
இவ்வாறு குடியரசுத் தலைவர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.