இந்தியா

புதுப்பிக்கப்படும் நேதாஜியின் கார்

பிடிஐ

கடந்த 1941-ம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசால் வீட்டுச் சிறையில் வைக்கப் பட்டிருந்த சமயத்தில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், தனது மூதாதையர் வீட்டில் இருந்து தப்பிச் செல்ல பயன்படுத்திய காரை, அவரின் குடும்பத்தினர் புதுப்பித்து வருகின்றனர்.

பிஎல்ஏ 7169 என்ற எண் கொண்ட ஜெர்மன் வாண்டரர் காரை, 1941-ம் ஆண்டும் ஜனவரி மாதம் கொல்கத்தாவில் இருந்து தான்பாத்துக்கு போஸ் ஓட்டிச் சென்றார். அதன் பிறகு, கடைசியாக 1971-ல் ஆவணப் படத்துக்காக நேதாஜியின் அண்ணன் சரத் சந்திர போஸின் மகன் சிசிர் போஸ் இதனை ஓட்டினார்.

அதிலிருந்து இந்த கார் காட்சிக் காக மட்டுமே வைக்கப்பட்டது. இந்த காரின் ஓட்டுநர் நாகசுந்தரமும் இறந்துவிட்டார். இந்நிலையில், போஸ் பயன்படுத்திய இக்காரை, புதுப்பிக்கும் பணியில் அவரின் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். புதுப்பிக்கும் பொறுப்பை, ஆடி நிறுவனத்திடமே வழங்கியுள்ளனர்.

வரும் டிசம்பர் மாதத்தில் கார் புதுப்பொலிவு பெற்றுவிடும். 100 முதல் 200 மீட்டர் தொலைவு வரை மட்டுமே இயக்கும் வகையில் அதைத் தயார் செய் கிறோம் என, நேதாஜி ரிசர்ச் பீரோ செயலாளர் கார்த்திக் சக்ரவர்த்தி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT