இந்தியா

‘யோகி மாம்பழம்’ விரைவில் விற்பனைக்கு வருகிறது - புதிய ரகத்துக்கு விவசாயி பெயர் சூட்டினார்

பிடிஐ

உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பெயரில் புதிய மாம்பழம் கூடிய விரை வில் விற்பனைக்கு வரக் காத் திருக்கிறது. அம்மாநிலத்தைச் சேர்ந்த மாம்பழ விவசாயி ஒருவர், தனது தோட்டத்தில் விளைந்துள்ள புதிய மாம்பழத்துக்கு “யோகி மாம்பழம்” எனப் பெயர் சூட்டியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அருகில் உள்ள மலிகாபாத் பகுதியைச் சேர்ந்தவர் கலிமுல்லா (74). விவசாயியான இவர், கடந்த 1957-ம் ஆண்டு முதல் மா மர வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார். சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் மாம்பழ தோட்டம் வைத்துள்ள இவர், அங்குள்ள சுமார் 100 ஆண்டு பழைமை வாய்ந்த மரத்தில் இருந்து இதுவரை 300-க்கும் மேற்பட்ட (மரபணு மாற்றம் செய்யப்பட்ட) புதிய வகை மாம்பழங்களை உருவாக்கியுள்ளார்.

கடந்த 1987-ம் ஆண்டு முதல் விதவிதமான மாம்பழங்களை உருவாக்கி வருகிறார் கலிமுல்லா. இதற்காக இவருக்கு பத்ம  விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது. அதேபோல் மாநில அரசின் “உதான் பன்டிட்” எனும் விருது உட்பட பல்வேறு விருதுகளை கலிமுல்லா பெற் றுள்ளார். இவரை மாம்பழ மனிதர் என அப்பகுதியினர் செல்லமாக அழைக்கின்றனர்.

மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் செயல்பாடு களால் ஈர்க்கப்பட்ட கலிமுல்லா, தனது தோட்டத்தில் விளைந்துள்ள புதிய வகை மாம்பழத்துக்கு “யோகி மாம்பழம்” எனப் பெயரிட்டுள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “மரபணு மாற்றம் செய்யப்பட்ட தஷரி வகையைச் சேர்ந்த மாம் பழத்தின் புதிய வரவுக்கு “யோகி மாம்பழம்” எனப் பெயரிட்டுள் ளேன். இது மெல்லியதாகவும், பார்க்க அழகாகவும் இருக்கும். அந்த மாம்பழம் இன்னும் பழுக்க வில்லை. அதன் சுவை பற்றி எனக்குத் தெரியாது. நன்றாக இருக்கும் என நம்புகிறேன்” என கலிமுல்லா தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக பிரதமர் மோடி, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் உட்பட பல்வேறு பிரபலங்களின் பெயரி லும் மாம்பழ வகைகளை அவர் அறிமுகப்படுத்தி உள்ளார்.

SCROLL FOR NEXT