இந்தியா

எல்லையில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு

ஏஎன்ஐ

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளைச் சுட்டுக் கொன்று, அவர்களது சதித் திட்டத்தைப் பாதுகாப்புப் படை வீரர்கள் முறியடித்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த 48 மணி நேரத்தில் உரி, நவ்காம், மச்சில், குரேஸ் ஆகிய பகுதிகளில் நடந்த ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன. இது வரை 12 தீவிரவாதிகள் கொல்லப் பட்டுள்ளனர்’ என தெரிவிக்கப் பட்டுள்ளது.

உரி எல்லை வழியாக இன்றும் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். இதில் 5 தீவிரவாதிகளைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்ற னர். அதேசமயம் தீவிரவாதிகள் சுட்டதில் இரு வீரர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ வசதியாக பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT