செம்மரம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 32 தமிழர்கள் நேற்று திருப்பதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அவர்கள் சித்தூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
வேலூர், திருவண்ணாமலை, சென் னையை சேர்ந்த 32 பேரை ரேணிகுண்டா போலீஸார் செம்மரம் கடத்தியதாக கைது செய்தனர். அவர்கள் அனைவரையும் கடந்த வெள்ளிக்கிழமை சப்தகிரி எக்ஸ் பிரஸ் ரயிலில் திருப்பதிக்கு வந்து செம்மரம் கடத்தியபோது கரகம்பாடி சாலையில் கைது செய்ததாகவும் அவர் களிடம் இருந்து கோடரிகள், கத்தி, கடப்பாரை போன்றவற்றை பறிமுதல் செய்திருப்பதாகவும் ரேணிகுண்டா டிஎஸ்பி நஞ்சுண்டப்பா செய்தியாளர் களிடம் கூறினார்.
ஆனால் தங்கள் மீது ரேணிகுண்டா போலீஸார் பொய் வழக்கு போட்டிருப் பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித் துள்ளனர். இந்நிலையில் 32 பேரையும் திருப்பதியில் உள்ள 5-வது கூடுதல் நீதிமன்றத்தில் போலீஸார் நேற்று ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, அவர்களை வரும் 20-ம் தேதி வரை, அதாவது 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து 32 பேரும் சித்தூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.