இந்தியா

சுப்ரதா ராய் மீது மை வீச்சு: உச்ச நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு

செய்திப்பிரிவு

சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய், உச்ச நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட போது நீதிமன்ற வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் சுப்ரதா மீது கருப்பு 'மை' வீசினார்.

அந்த நபரை போலீசார் சுற்றிவளைத்துப் பிடித்தனர். இந்த சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

முதலீட்டாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடியை திருப்பித் தராதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நேரில் ஆஜராகாத சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய்க்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்ட் பிறப்பித்தது. அத்துடன் மார்ச் 4-ம் தேதி 2 மணிக்கு நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை லக்னோ காவல் நிலையத்தில் ஆஜரான அவரை போலீஸார் கைது செய்தனர். இன்று அவரை உச்ச நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்துகின்றனர்.

SCROLL FOR NEXT