கோடை விடுமுறை தொடங்கி இருப்பதால் திருமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் ஏழுமலையானை தரிசனம் செய்ய 8 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்தனர்.
ஆந்திரா, தெலங்கானா, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் சமீபத்தில் நடந்து முடிந்தன. இதனால் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக திருமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 87,831 பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். மேலும் அன்றைய தினம் பக்தர்கள் உண்டியலில் ரூ.3.54 கோடியை காணிக்கையாக செலுத்தி இருந்தனர். பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.