ராணுவ வாகனங்கள் மீது தீவிரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் ஒரு போலீஸ்காரர் மற்றும் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
காஷ்மீரில் நகர், அனந்த்நாக் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தொடர்கிறது. பாரமுல்லா மாவட்டம் க்வாஜாபாக் பகுதியில் பாதுகாப்புப்படை வாகனங்கள் மீது நடந்த தீவிரவாத தாக்குதலில் ஒரு போலீஸ்காரர், 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர்.
தாக்குதலில் ஈடுபட்டவர்களை பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர். தாக்குதல் சம்பவத்தை போலீஸ் அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார். நேற்று முன்தினம் புத்காம் மாவட்டத்தில், பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்குபேர் உயிரிழந்த மாகம் பகுதியிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதர பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக் கப்பட்டுள்ளன.
தீவிரவாதி புர்ஹான் வானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, காஷ்மீரில் கடந்த ஜூலை 9-ம் தேதி முதல் வன்முறைப் போராட் டங்களால் இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். பிரிவினை வாதிகள் வேலை நிறுத்தப் போராட் டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள தால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
காஷ்மீரின் தற்போதைய பதற்றமான சூழலுக்கு ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி- பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அரசுதான் காரணம். பிரதமர் மோடியின் உரை, பிரச்சினையை மேலும் தூண்டி விட்டுள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: கடந்த 6 வாரங் களாக ஏற்பட்டுள்ள காஷ்மீரின் மிக மோசமான சீர்குலைவுக்கு ஆளும் கூட்டணி அரசுதான் பொறுப்பாளி. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் ஆகியோரின் பேச்சுகள் பிரச்சினையை மேலும் தூண்டிவிட்டுள்ளன.
வார்த்தைகளில் நிதானமும், செயல்பாடுகளுமே நிலைமையை சரிசெய்யும். போராடும் இளைஞர் கள், பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ள னர். தற்போதைய அரசால் பிரச் சினைக்குத் தீர்வு காண முடியாது என அஞ்சுகிறேன். காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, விருப்ப மிருந்தால் மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை இணைந்து தீர்வு காண முன்வர வேண்டும். முதலில் வன்முறையை உடனடியாக நிறுத்துவதற்கான தீர்வு தேவை. பிறகு, நம்பிக்கை, அமைதி, வளம் ஆகியவற்றை ஜம்மு-காஷ்மீர் மக்களிடம் கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.