இந்தியா

பாஜக ஒரு நோய்: நிதிஷ் குமார் சாடல்

செய்திப்பிரிவு

பாரதிய ஜனதா கட்சி மதவாத கோட்பாடுகள் நிறைந்த ஒரு 'நோய்' எனவும், அக்கட்சியின் அழுகிய எண்ணங்கள் அவ்வப்போது வெளித் தோன்றுகிறது எனவும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கடுமையாக சாடியுள்ளார்.

பீகார் மாநில சிறுபான்மை துறை அமைச்சர் சாஹித் அலி கானுக்கும் இந்தியன் முஜாஹிதீன் ஏஜன்டுகள் இருவருக்கும் தொடர்பு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அமைச்சருக்கு எந்த வித தொடர்பும் இல்லை என பீகார் போலீசார் அண்மையில் தெரிவித்தனர்.

இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த சர்ச்சையின் அடிப்படையிலேயே நிதிஷ் பாஜகவை விமர்சித்துள்ளார்.

நிதிஷ் கூறியதாவது: "இஸ்லாமியர்கள் விவகாரத்தில், அமைச்சராக இருந்தாலும் சாமான்யனாக இருந்தாலும் பாஜகவுக்கு ஒரே கண்ணோட்டம் தான் இருக்கிறது. அமைச்சர் சாஹித் அலி கான் பற்றி பாஜகவினருக்கு நன்றாகத் தெரியும், இருப்பினும் அவர் மீது விசாரணையும், நடவடிக்கையும் கோரி பாஜகவினர் குரல் எழுப்பியது அவர்களது சிறுபான்மை விரோதப்போக்கை காட்டுகிறது" என்றார்.

SCROLL FOR NEXT