இந்தியா

இந்தியப் பொருளாதார நிலை மேம்படும்: சிதம்பரம் நம்பிக்கை

செய்திப்பிரிவு

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது பகுதியில் இந்தியப் பொருளாதார நிலை மேம்படும் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நிலையை மேம்படுத்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நல்ல பயன் தரும். இதன் மூலம் இந்தியாவின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி 8%- ஆக நிலையை அடையும் என அவர் தெரிவித்தார்.

2013- 2014 நிதியாண்டில், நடப்பு கணக்கு பற்றாக்குறை 56 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் கட்டுப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வங்கித்துறை பற்றி பேசிய அவர்: அடுத்த ஆண்டு ஜனவரியில் புதிய வங்கிகள் தொடங்க அனுமதி அளிக்கப்படும் என்றார். வங்கிகளை ஏமாற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

SCROLL FOR NEXT