இந்தியா

நீதிபதி கர்ணன் மருத்துவமனையில் அனுமதி

பிடிஐ

மேற்கு வங்க போலீஸாரால் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன், உடல்நலக் குறைவு காரணமாக கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சி.எஸ்.கர்ணனுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மே 9-ம் தேதி 6 மாத சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து தலைமறைவான கர்ணன் கடந்த செவ்வாய்க்கிழமை கோவை அருகே கைது செய்யப்பட்டார்.

நேற்று முன்தினம் விமானம் மூலம் கொல்கத்தா அழைத்துவரப் பட்ட கர்ணன், இங்குள்ள பிரசி டென்சி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சிறையில் அவர் நெஞ்சு வலிப்பதாக கூறியதால் அவரை சிறை அதிகாரிகள் எஸ்எஸ்கேஎம் அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் நேற்று காலை மீண்டும் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், சில பரிசோதனை முடிவுகள் வரும் வரை அவரை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு ஆலோசனை கூறினர். கர்ணன் நேற்று காலையில் சிறிதளவே உணவு எடுத்துக் கொண்டதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

SCROLL FOR NEXT