உ.பி மற்றும் ராஜஸ்தான் மாநில போக்குவரத்து துறைகளுக்கு இடையே புதிய உடன்பாடு லக்னோ வில் நேற்று கையெழுத்தானது. அப்போது முதல்வர் ஆதித்யநாத் கூறும்போது, ‘‘போக்குவரத்து விதிகளை மீறுவதால் தினசரி விபத்துகள் நடப்பது வாடிக்கை யாகிவிட்டது. இது மிகுந்த கவலைக் குரிய விஷயம். போக்குவரத்து விதிகளில் போதிய விழிப்புணர்வு இல்லாததே விபத்துகள் அதி கரிக்க காரணம். எனவே பாது காப்பான பயணத்தை உறுதி செய்ய மாநில சாலை போக்கு வரத்துக் கழகம் உரிய திட்டங்களை வகுக்க வேண்டும்’’ என்றார்.
இந்த ஒப்பந்தம் மூலம் டெல்லி ஜெய்பூர், அஜ்மீர் ஹரித்வார் மீரட் உள்ளிட்ட பகுதிகளில் சாலை இணைப்பு வசதிகள் மேம்படும் என்றும் ஆதித்யநாத் தெரிவித்தார்.