இந்தியா

பிரதமர் மோடி பக்ரீத் வாழ்த்து

செய்திப்பிரிவு

பக்ரீத் பண்டிகையை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பக்ரீத் பண்டிகை வாழ்த்துகள். இந்த பண்டிகை அமைதி மற்றும் சமூக ஒற்றுமை சிந்தனையை ஊக்குவிக்கும் என நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தியாகத்தை நினைவுறுத்தும் வகையில் இஸ்லாமிய மக்கள் இன்று பக்ரீத் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

SCROLL FOR NEXT