சிபிஐ இயக்குநரை தேர்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
சிபிஐ இயக்குநராக இருந்த அனில் சின்ஹா கடந்த டிசம்பர் 2-ம் தேதி ஓய்வு பெற்றார். தற்போது ராகேஷ் அஸ்தானா இடைக்கால இயக்குநராக உள்ளார்.
எனவே புதிய இயக்குநரை தேர்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது அவரது பிரதிநிதி பங்கேற்பார்.
மொத்தம் 45 ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் சிபிஐ இயக்குநராக தேர்வு செய்யப்படுவார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.