உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப் பதைக் கட்டாயமாக்கி நாட்டி லேயே முதல் முறையாக குஜராத் தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
‘குஜராத் உள்ளாட்சி அதிகார சட்டம் 2009’ மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பதன் மூலம், குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பது கட்டாய மாகியுள்ளது. இச்சட்டத்தின் மூலம் மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.
வாக்களிப்பது கட்டாயமாக் கப்பட்டிருப்பதன் மூலம், யாரே னும் ஒருவர் வாக்களிக்காமல் இருந்ததற்கு வலுவான காரணம் கூறவில்லை என்றால், அவர் கடமை தவறியவர் எனக் குறிப்பி டப்பட்டு, தண்டனை அளிக்கப் படும். வேட்பாளரை நிராகரிக் கும் நோட்டா உரிமையைத் தேர்வு செய்ய, இச்சட்டம் அனுமதி அளிக்கிறது. இம்மசோதா குஜராத் சட்டப்பேரவையில் 2009-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால், அப்போதைய ஆளுநர் கமலா பெனிவால் அதை நிராகரித்து திருப்பி அனுப்பி விட்டார். இச்சட்டம் அரசியல் சாசனத்துக்கு முரணானது என அவர் தெரிவித்தார்.
மோடி தலைமையிலான குஜராத் அரசு 2011-ம் ஆண்டு சட்டப்பேரவையில் திருத்தங்கள் ஏதும் இன்றி மீண்டும் நிறைவேற்றியது. அப்போதும், ஆளுநர் கமலா பெனிவால் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
இந்நிலையில், தற்போது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓ.பி. கோஹ்லி இச்சட்டத்துக்கு அனுமதி அளித்துள்ளார்.தேர்தல் நடவடிக்கைகளில், வாக்காளர் களின் விருப்பத்தை அதிகரிக்க இச்சட்டம் அவசியமானது என குஜராத் அரசு தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு அக்டோபரில் குஜராத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.