இந்தியா

ஜெயின் துறவி பற்றி சர்ச்சைக்குரிய கருத்து: இசையமைப்பாளர் விஷாலை கைது செய்ய தடை விதிக்க முடியாது- உயர் நீதிமன்றத்தை அணுக உச்ச நீதிமன்றம் அறிவுரை

பிடிஐ

ஜெயின் துறவி தருண் சாகர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இசையமைப் பாளர் விஷால் தத்லானியை கைது செய்ய தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித் துள்ளது.

ஹரியாணா அரசின் அழைப் பினை ஏற்று, கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி அம்மாநில சட்டப்பேரவையில் ஜெயின் துறவி தருண் சாகர் ஆடையின்றி உரையாற்றினார். இதைக் கண்டிக்கும் வகையில், ஆம் ஆத்மி கட்சியின் தீவிர ஆதர வாளரான விஷால் மற்றும் சிலர் சாகரை கேலி செய்யும் வகையில் ட்விட்டரில் கருத்து தெரிவித்தனர்.

எனினும், இதற்கு டெல்லி முதல்வர் கண்டனம் தெரிவித்த தால், சாகரிடம் விஷால் மன்னிப்பு கோரினார். பின்னர் கட்சியிலிருந் தும் விலகினார்.

இதனிடையே, தருண் சாகரின் பக்தரான அம்பாலா கன்டோன் மென்ட் பகுதியில் வசிக்கும் புனித் அரோரா, அப்பகுதி காவல் நிலை யத்தில் விஷால் மற்றும் காங்கிரஸ் பிரமுகர் தசீன் பூன்வாலா ஆகியோர் மீது புகார் செய்துள்ளார்.

மத உணர்வைத் தூண்டும் வகை யில் சாகரை கேலி செய்யும் வகை யில் இருவரும் வேண்டுமென்றே கருத்து தெரிவித்துள்ளதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. இதன் பேரில் இருவர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, தன் மீதான வழக்கை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி விஷால் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய் யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் வி.கோபால கவுடா மற்றும் ஆதர்ஷ் குமார் கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

விஷால் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கருணா நந்தி, தனது கட்சிக்காரர் மீதான வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும், அல்லது அவரைக் கைது செய்ய இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று வாதாடி னார். ஆனால், இந்தக் கோரிக் கையை நிராகரித்த நீதிபதிகள், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT