இந்தியா

இந்திரா காந்தியின் 96வது பிறந்த நாள்: தலைவர்கள் மரியாதை

செய்திப்பிரிவு

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 96வது பிறந்த நாளை ஒட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

உள்துறை அமைச்சர் ஷிண்டே, சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் ஆகியோரும், மரியாதை செலுத்தினர். சர்வ சமய பக்திப் பாடல்கள் இசைக்கப்பட்டதோடு, இந்திராகாந்தியின், உரையும் ஒலிபரப்பப்பட்டது. இந்திரா காந்தி, 1917-ஆம் ஆண்டு நவம்பர் 19-ல் பிறந்தார்.

SCROLL FOR NEXT