இந்தியா

எம்.பி.க்களுக்கான சலுகைகளை நிறுத்தக் கோரி மனு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

பிடிஐ

நாடாளுமன்ற எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் உள்ளிட்ட பிற சலுகைகளை நிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்குமாறு கேட்டு மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற எம்.பி.க்களுக்கு ஊதியம் தவிர பேருந்து, ரயில், விமானத்தில் செல்ல சலுகைகள் வழங்கப்படுகின்றன. இலவச தொலைபேசி வசதி, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றால் தினப்படி உட்பட பல்வேறு சலுகை கள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் ஓய்வூதியம் உட்பட சலுகைகளை நிறுத்தக் கோரி என்ஜிஓ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.செலமேஸ்வர் தலைமையி லான அமர்வு மக்களவை மற்றும் மாநிலங்களவை பொதுச் செயலாளருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

என்ஜிஓ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில், ‘எம்.பி.,க்கள் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் அவர் களுக்கு ஓய்வூதியம் மற்றும் பிற சலுகைகள் வழங்கப்படுவது அரசமைப்பு சட்டம் (சரிசம உரிமை) 14-வது பிரிவுக்கு முரணாக உள்ளது. எனவே அந்த சலுகை களை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

ஏனெனில் எவ்வித சட்டமும் இயற்றாமல் எம்.பி.க்களுக்கு ஓய்வூதிய பயன்களை வழங்க நாடாளுமன்றத்துக்கு எந்த அதிகார மும் இல்லை’ என குறிப்பிடப் பட்டிருந்தது.

SCROLL FOR NEXT