இந்தியா

ஒடிசா மாநிலத்தில் 22 மாவோயிஸ்ட்கள் சரண்

செய்திப்பிரிவு

மல்காங்கிரி: ஒடிசா மாநிலம் மல்கான்கிரி மாவட்டத்தில், நேற்று காலை மாநில போலீஸ் டிஜிபி யொய்.பி. குர்ரானியா முன்னிலையில் 22 மாவோயிஸ்ட்கள் சரண் அடைந்தனர்.

அவர்கள் தங்களிடமிருந்த 9 துப்பாக்கிகள், 20 கிலோ வெடிபொருள்கள், 13 ஐ.ஈ.டி. எனப்படும் நவீன ரக வெடிகுண்டுகள், ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட ஆயுதங்களை பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்து உள்ளனர்.

இதைத் தொடர்ந்து சரண் அடைந்துள்ள மாவோயிஸ்ட்களின் மறுவாழ்வுக்காக அரசு அறிவித்துள்ள அனைத்து உதவிகளும் அவர்களுக்கு செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். முன்னதாக, சரணடையும் மாவோயிஸ்ட்டுகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை, கடந்த நவம்பர் 27-ம் தேதி உயர்த்தி ஒடிசா மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதன்மூலம், ஒடிசாவில் வழங்கப்படும் உதவித் தொகை சத்தீஸ்கரில் வழங்கப்படுவதை விட 10 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT