கடந்த ஜூலையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான டோகோவில் கைது செய்யப்பட்ட இந்திய வணிகக் கப்பல் மாலுமிகள் சுனில் ஜேம்ஸ், விஜயன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் ட்விட்டரில் வெளியிட்ட தகவலில், டோகோ அதிபரைச் சந்தித்து இந்தியத் தூதர் பேச்சு நடத்தியதைத் தொடர்ந்து, கேப்டன் சுனில் ஜேம்ஸ் மற்றும் கேப்டன் விஜயன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய மாலுமிகள் இருவரும் இன்று (வியாழக்கிழமை) தாயகம் திரும்புவர் என்றும் அவர் தனது தகவலில் தெரிவித்துள்ளார்.
கடற்கொள்ளையர்களுக்கு உதவியாகக் குற்றம்சாட்டப்பட்ட இந்திய மாலுமிகள் சுனில் ஜேம்ஸ் மற்றும் விஜயன் ஆகியோர் ஜூலை மாதம் கைது செய்யப்பட்டு, டோகோ சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.