இந்தியா

தூய்மை இந்தியா திட்டத்தால் பிரபலங்களுக்கு மட்டுமே பலன்: ராகுல் காந்தி தாக்கு

ஐஏஎன்எஸ்

மத்திய அரசு மேற்கொள்ளும் தூய்மை இந்தியா திட்டம் பிரபலங்கள் புகைப்படம் எடுத்து போஸ் கொடுக்க மட்டும் தான் உபயோகப்படுகிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) நேருவின் 125வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் பேசும்போது, "தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டதை அடுத்து மக்கள் தெருக்களை சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள், ஆனால் இதில் எந்த பயனும் இல்லை. பிரபலங்கள் புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கவே இந்த திட்டம் பயன்படுகிறது.

நாடெங்கும் மிக மோசமான வன்முறைச் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், தூய்மை படுத்துகிறோம் என்று கூறிக் கொண்டு பலரும் துடப்பத்தை வைத்துக் கொண்டு தெருவை சுத்தப்படுத்துவது போல புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் பாஜக செய்தி தொடர்பாளர் நளின்கோலி கூறுகையில், "ராகுலின் அரசியல் வாழ்க்கையே புகைப்படத்துக்கு போஸ் கொடுப்பதை வைத்து மட்டும் நடக்கிறது. ராகுல், ரயில்களில் பயணம் செய்வதும், தலித் வீடுகளுக்கு சென்று நலன் விசாரிப்பது என அவரது அனைத்து நடவடிக்கையும் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்து விளம்பரப்படுத்த தான் செய்யப்படுகிறது" என்று கூறி உள்ளார்.

SCROLL FOR NEXT