குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் மனு தாக்கல் செய்யும்போது அதற் கான கட்டணமான ரூ.15 ஆயிரத்தை தேர்தல் அதிகாரி யிடம் ரொக்கமாக மட்டுமே செலுத்த வேண்டும் என அறிவிக் கப்பட்டுள்ளது. அங்குள்ள வங்கி அதிகாரி ரொக்கத்தை எண்ணி பெற்றுக் கொள்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்தக் கட்டணத்தை ரிசர்வ் வங்கியில் ரொக்கமாக செலுத்தியும் அதற்கான ரசீதை மனுவுடன் இணைத்து வழங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், காசோலையாகவோ மின்னணு முறையிலோ கட் டணத்தை செலுத்த அனுமதிக் கப்பட மாட்டார்கள்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் இதுவரை 15 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 7 பேரின் மனுக்கள் முறையான ஆவணங்கள் இல்லாத காரணத் தால் உடனடியாக நிராகரிக்கப் பட்டன. மற்றவர்களின் மனுக் களும் பரிசீலனைக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.